
கிருஷ்ணகிரி மாவட்டம் தளி பகுதியை சேர்ந்தவர் சையதுல்லா (43.) இவரது மனைவி பூஜீயா(38). இவர்களுக்கு 12 வயதில் மற்றும் 7 வயதில் என இரு மகன்கள் உள்ளனர். சையதுல்லா அதே பகுதியில் வெல்டிங் ஒர்க்ஷாப் வைத்து நடத்தி வருகிறார். இவரது மனைவி பூஜீயாவுக்கு மனநிலை பாதிக்கப்பட்டு இருந்ததாக கூறப்படுகிறது. கடந்த 16-ந் தேதி தனது இரு மகன்களை அழைத்து கொண்டு உறவினர் வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றவர் அங்கு செல்லவில்லை. இது குறித்து சையதுல்லா அளித்த புகாரின் பேரில் தளி போலீசார் வழக்கு பதிவு செய்து இரு மகன்களுடன் மாயமான தாயை தேடி வருகின்றனர்.