
தமிழ்நாடு மற்றும் புதுச்சேரிக்கு நாளை மற்றும் நாளை மறுநாள் மிக கனமழைக்கான ஆரஞ்சு அலர்ட் விடுத்துள்ளது இந்திய வானிலை ஆய்வு மையம். மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை என்பதால் 12 முதல் 20 செ.மீ. வரை மழை பெய்யும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் இன்று முதல் 5 நாட்கள் கனமழைக்கும் நாளை, நாளை மறுநாள் மிக கனமழைக்கும் வாய்ப்பு உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. ஆந்திராவில் கடலோர மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யக்கூடும். கர்நாடகாவில் நாளை முதல் 4 நாட்கள் கனமழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. சென்னையில் அதிகபட்சமாக நேற்று தண்டையார்பேட்டையில் 6.9 செமீ, நுங்கம்பாக்கத்தில் 6.4 செமீ மழை பதிவாகி உள்ளது.