
ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தில் மொத்தம் 10 வனச்சரகங்கள் உள்ளன. நேற்று இரவு 8 மணியளவில் ஆசனூர் அடுத்த காராப்பள்ளம் சோதனைசாவடியில் ஆசனூர் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது வனப்பகுதியில் இருந்து வெளியேறிய ஒற்றை யானை சோதனை சாவடி அருகே வந்தது. இதை கண்ட போலீசார் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர். சுமார் 15 நிமிடம் சாலையில் ஒற்றை யானை உலா வந்தது. இதனால் அவ்வழியாக வந்த வாகனங்கள் இருபுறமும் அணிவகுத்து நின்றன. இதனால் கர்நாடக-தமிழகம் இடையே சுமார் 15 நிமிடங்கள் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் மெதுவாக யானை வனப்பகுதிக்குள் சென்றது. அதன் பின்னரே போலீசார் நிம்மதி அடைந்து பெருமூச்சுவிட்டனர்.