
துருக்கியில் இருந்து குஜராத் பிபாவாவ் துறைமுகம் நோக்கி வந்த கேலக்சி லீடர் என்ற சரக்கு கப்பல் செங்கடல் பகுதியில் ஏமன் நாட்டு ஹவுத்தி கிளர்ச்சியாளர்களால் கடத்தப்பட்டது. கப்பலில் இருந்த மாலுமிகள் உள்ளிட்ட 25 பேர் பிணைக் கைதிகளாக பிடிக்கப்பட்டனர். தென்மேற்கு ஆசிய நாடான ஏமன் நாட்டில், சன்னி பிரிவு அதிபர், ஷியா பிரிவின் ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் இடையே கடந்த 2015ம் ஆண்டு முதல் உள்நாட்டுப் போர் நடக்கிறது. ஈரான் ஆதரவு பெற்ற ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள், ஹமாஸ் அமைப்பினருக்கு ஆதரவு தருகின்றனர். இந்த நிலையில், நேற்று முன் தினம் மதியம் இஸ்ரேல் தொழிலதிபருக்கு சொந்தமான கேலக்சி லீடர் என்ற சரக்கு கப்பல் செங்கடல் வழியாக குஜராத் பிபாவாவ் துறைமுகம் நோக்கி வந்தது. அப்போது ஹெலிகாப்டர் மூலம் கப்பலின் மேல்தளத்தில் இறங்கிய ஹவுத்தி கிளர்ச்சியாளர்கள் கப்பலை கைப்பற்றி அதிலிருந்த 25 பேரை பிணைக்கைதிகளாக பிடித்தனர்.