
ஆரோக்கியமான இளைஞர்கள் இடையே விவரிக்கப்படாத மரணங்களுக்கு பங்களிக்கும் காரணிகளை ஐசிஎம்ஆர் எனப்படும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆய்வு செய்தது. அக் 1. 2021 மற்றும் மார்ச் 31 2023க்கு இடையில் விவரிக்கப்படாத காரணங்களால் திடீரென இறந்த 18 முதல் 45 வயதுடைய 729 ஆரோக்கியமான நபர்களின் அடிப்படை உடல்நலப் பிரச்சனைகள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டன.
ஆய்வின் இறுதியில் கொரோனா தடுப்பூசி இளைஞர்கள் இடையே திடீர் இறப்பு அபாயத்தை அதிகரிக்கவில்லை என்றும் உண்மையில் திடீர் மரணம் ஏற்படும் அபாயத்தை தடுப்பூசி குறைத்துள்ளது என்பதும் ஆய்வில் தெரியவந்துள்ளது. இளம் வயதினர் இடையே ஏற்பட்ட திடீர் இறப்புகள், பரம்பரை நோய் வரலாறு, வாழ்க்கை முறை மாற்றம் , மது உள்ளிட்ட தனிப்பட்ட பழக்க வழக்கங்கள் ஆகியவை காரணமாகவே ஏற்பட்டுள்ளதாக ஐசிஎம்ஆர் தெரிவித்துள்ளது.