
இலங்கை, தாய்லாந்துக்கு அடுத்தபடியாக வியட்நாமுக்கு இலவச விசா வழங்கப்படவுள்ளது .நாட்டின் சுற்றுலாத் துறைக்கு புது வாழ்வு அளிக்கும் வகையில் மேலும் பல நாடுகளுக்கு இலவச விசா வழங்கும் முடிவை ஏற்றுக்கொள்வதாக வியட்நாம் அரசு தெளிவுபடுத்தியுள்ளது. கலாசாரம், விளையாட்டு மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் கியூன் வான் ஜங் இதனைத் தெரிவித்தார். இந்தியா மற்றும் சீனாவுக்கு இலவச விசா வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜெர்மனி, பிரான்ஸ், சுவீடன், இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க் மற்றும் பின்லாந்து போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்களுக்கு ஏற்கனவே இலவச விசாக்கள் உள்ளன. கடந்த பத்து மாதங்களில் கிட்டத்தட்ட 10 மில்லியன் சர்வதேச சுற்றுலாப் பயணிகள் வியட்நாமிற்கு வருகை தந்துள்ளனர். கொரோனா தொற்று பரவுவதற்கு முன்பு, சுமார் 1.7 லட்சம் இந்தியர்கள் வியட்நாமுக்கு பயணம் செய்துள்ளனர். இலவச விசா வழங்குவதன் மூலம் வியட்நாமிற்கு அதிகமான இந்தியர்களை ஈர்ப்பதே இதன் நோக்கம்.