
ஆந்திரா: விசாகப்பட்டினம் துறைமுகத்தில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ள நிலையில் படகுகள் எரிகின்றன. தீவிபத்தில் 60க்கும் மேற்பட்ட படகுகள், மீன்பிடி வலைகள் எரிந்து வரும் நிலையில் தீயை அணைக்க போராடி வருகின்றனர். படகுகளில் டீசல், எண்ணெய், சமையல் எரிவாயு சிலிண்டர் உள்ளதால் தீயை கட்டுப்படுத்தும் பணி தீவிரம் அடைந்துள்ளது.