
தருமபுரி மாவட்டம், கே.நடுஅள்ளி பகுதியை சேர்ந்தவர் முருகன் (45). சற்று மனநலம் பாதிக்கப்பட்டவரான இவர் நேற்று இரவு வீட்டில் தனியாக இருந்தபோது தூக்கு போட்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதுகுறித்து டவுன் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து முருகனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.