
புளியந்தோப்பு பகுதியை சேர்ந்தவர் சந்தோஷ் குமார் (42). தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோமதி ரேகா (39). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். நேற்று காலை சந்தோஷ் குமார், திண்டிவனத்தில் நடைபெற்ற உறவினர் திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக குழந்தைகள் மற்றும் தாயுடன் சென்றார். இந்தநிலையில் வீட்டில் தனியாக இருந்த கோமதி ரேகா திடீரென தனது உடலில் மண் எண்ணெயை ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். கோமதி ரேகா கடந்த சில வருடங்களாக சற்று மனநலம் பாதித்து இருந்ததாக தெரிகிறது. இதுகுறித்து பேசன் பிரிட்ஜ் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்கள்.