
புதிதாகப் பிறந்த குழந்தை புதர்களில் கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கன்னியாகுமரி மாவட்டம் முஞ்சிறைக்கு அருகே பிறந்து ஒரு மணி நேரமே ஆன ஆண் குழந்தை ஒன்று கைவிடப்பட்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டது. கேரளாவில் இருந்து கன்னியாகுமரி செல்லும் சாலையின் அருகே உள்ள முட்புதர் பகுதியில் குழந்தை துணியில் சுற்றப்பட்ட நிலையில் கிடந்தது. இதையடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து குழந்தையை மீட்டு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து விசாரணை தொடங்கப்பட்டுள்ளதாக போலீஸார் தெரிவித்தனர்.