
பனாஜி: கோவாவில் பாஜ தலைமையில் பிரமோத் சாவந்த் முதல்வராக உள்ளார். எதிர்க்கட்சியான காங்கிரசை விட குறைவான எம்.எல்.ஏக்கள் இருந்த நிலையில் கூட்டணி கட்சியினர் ஆதரவில் பாஜ ஆட்சியை பிடித்தது. இந்நிலையில் காங். எம்.எல்.ஏக்கள் 8 பேர் கடந்த ஆண்டு பாஜவில் இணைந்தனர். அவர்களில் ஒருவரான அலெக்சியோ சிகொய்ராவுக்கு (66) அமைச்சரவையில் இடமளிக்கும் வகையில் கோவா பொதுப்பணித்துறை அமைச்சரான நிலேஷ் காப்ரல் (51) பதவி விலக பாஜ மேலிடம் உத்தரவிட்டது. அதை ஏற்று கோவா ஆளுநருக்கு தனது ராஜினாமா கடிதத்தை நிலேஷ் காப்ரல் அளித்தார். அதனையடுத்து நேற்று மாலை ஆளுநர் மாளிகையில் நடந்த பதவியேற்பு நிகழ்வில் அலெக்சியோ சிகொய்ராவுக்கு ஆளுநர் பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.