
இயக்குனர் செல்வராகவன் ‘தான் அழுது கொண்டே இருந்ததாக’ சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார். அதாவது, “நேற்று கிரிக்கெட்டில் தோற்றபிறகு அழுது கொண்டே இருந்தேன். என் குழந்தைகளுக்கு புரியவில்லை. தந்தை அழுது அவர்கள் பார்த்தது இல்லை. பாவம். அது கிரிக்கெட்டில் தோற்றதற்கு வரும் கண்ணீர் அல்ல. என் நாடு தோற்பதை என்னால் பார்க்க முடிய வில்லை. அதில் வரும் வலியை சொல்ல இயலாது. நெஞ்சம் உடைந்து சிதறியது” என்று குறிப்பிட்டுள்ளார். இந்திய அணி நிச்சயமாக வெற்றி பெரும் என நம்பி இருந்த ரசிகர்களுக்கு இந்த தோல்வி பேரிடியாக இருந்தது. அதுமட்டுமல்லாமல், இந்திய அணி வீரர்களும் களத்திலேயே மனமுடைந்து கண்ணீர் சிந்தியபடி வெளியேறினர்.