
அரிசி, உயர் கிளைசெமிக் இண்டெக்ஸ் குறியீட்டை கொண்டது. அதாவது விரைவாக சர்க்கரையை வெளியிடக்கூடியது. அதே வேளையில் தூக்கத்தை தூண்டுவதாகவும் ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன. இது ரத்தத்தில் உள்ள குளுக்கோஸ், டிரிப்டோபன் என்னும் அமினோ அமில உருவாக்கத்தை எளிதாக்குகிறது. இந்த அமினோ அமிலம்தான் உடலில் செரோடோனின் மற்றும் மெலடோனின் ஹார்மோன்களை உருவாக்க உதவுகிறது. அதனால் உணவின் ஒரு பகுதியாக அரிசி சாதம் சேர்த்துக்கொள்வது நல்லது. அத்துடன் முழு கோதுமை, பாஸ்தா, கம்பு, ரொட்டி போன்ற குறைந்த கிளைசெமிக் குறியீடு கொண்ட உணவு பொருட்களை சாப்பிட்டு வருவது இரவு நல்ல தூக்கத்திற்கு வழிவகை செய்யும்.