
தனது 2வது உலக கோப்பையில் தனது 2வது சதத்தை டிராவிஸ் வெளுத்தார். அதுமட்டுமன்றி உலக கோப்பை இறுதி ஆட்டத்தில் சதம் விளாசியவர்கள் பட்டியலில் டிராவிசும் நேற்று 7வது வீரராக இணைந்தார். அதிலும் இலக்கை விரட்டும் சதமடித்த 2வது வீரர் என்ற பெருமையும் இவருக்கு உள்ளது. இதற்கு முன் 1996 பைனலில் இலங்கை வீரர் ஜெயவர்த்தனா சதம் விளாசினார். அதில் இலங்கை சாம்பியன் பட்டமும் வென்றது.