
ஆளுநர் மீது தமிழக அரசு தொடர்ந்த வழக்கு உச்ச நீதிமன்றத்தில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆளுநருக்கு எதிராக தமிழக அரசு கடும் குற்றச்சாட்டுக்களை கூறியது. இந்த பரபரப்பான சூழ்நிலையில், சட்ட ஆலோசனைகளை மேற்கொள்வதற்காக ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று மாலை டெல்லி புறப்பட்டு சென்றார். அவர், டெல்லியில் உள்துறை அமைச்சர் அமித் ஷா, ஒன்றிய அரசின் தலைமை வழக்கறிஞர் மற்றும் சட்ட நிபுணர்களை அவர் இன்று நேரில் சந்தித்து ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. எனவே, ஆளுநரின் டெல்லி பயணம் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.