
ரஷ்யாவின் சைபீரியாவில் புயலில் சிக்கி 3 பேர் உயிரிழந்தனர். நேற்று வினாடிக்கு 38 மீட்டர் வேகத்தில் காற்று வீசியது. பலர் காயம் அடைந்தனர். பலத்த காற்றினால் மின் கம்பிகள் மற்றும் கட்டிடங்கள் சேதமடைந்ததை அடுத்து நோவோகுஸ்நெட்ஸ்க் நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது. பள்ளிகள் மற்றும் மழலையர் பள்ளிகள் இன்று இயங்காது. அருகிலுள்ள புரோகோபிவ்ஸ்க் நகரிலும் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டது.
கெமரோவோ, க்ராஸ்நோயார்ஸ்க், நோவோசிபிர்ஸ்க், ஓம்ஸ்க், அல்தாய் க்ராய், அல்தாய் குடியரசு மற்றும் ககாசியா குடியரசு ஆகிய இடங்களிலும் புயல் பேரழிவை ஏற்படுத்தியதாக ரஷ்ய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.