
சவுதி அரேபியாவில் சட்ட விரோதமாக விறகு மற்றும் கரி பொருட்களை விற்பனை செய்த 7 வெளிநாட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். மக்கா மாகாணத்தில் நடத்தப்பட்ட சோதனையின் போது வெளிநாட்டவர்கள் பிடிபட்டதாக அமைச்சகம் தெரிவித்துள்ளது. நான்கு சூடான் பிரஜைகளும் மூன்று எகிப்திய பிரஜைகளும் கைது செய்யப்பட்டனர். அவர்களிடமிருந்து 115 கன மீட்டருக்கும் அதிகமான உள்ளூர் விறகு மற்றும் கரி கைப்பற்றப்பட்டது. நாடு குளிர்காலத்தில் நுழைவதால், சுற்றுச்சூழல், நீர் மற்றும் வேளாண் அமைச்சகம் ஆய்வை தீவிரப்படுத்தியுள்ளது. சவூதி அரேபியாவில் அங்கீகரிக்கப்படாத மரம் வெட்டுதல், விறகு உற்பத்தி மற்றும் விற்பனை செய்வது தண்டனைக்குரிய குற்றமாகும்.