
இந்திய வீரர்களின் மனநிலை குறித்து பயிற்சியாளர் ராகுல் டிராவிட் தெரிவித்துள்ளதாவது; “டிரஸ்ஸிங் அறையில் நிறைய உணர்ச்சிகள் இருந்தன. ஒரு பயிற்சியாளராகப் பார்ப்பது கடினமாக இருந்தது, ஏனென்றால் அவர்கள் எவ்வளவு கடினமாக உழைத்தார்கள், அவர்கள் என்ன செய்தார்கள் மற்றும் அவர்கள் செய்த தியாகங்கள் எனக்கு தெரியும்.
ரசிகர்கள் இல்லாமல் என்ன கிரிக்கெட்டை நம்மால் ஆடிவிட முடியும். இப்படியொரு பேரார்வமிக்க ரசிகர்களுக்கு மத்தியில் ஆடியதில் எங்களுக்குதான் பெருமை. ரோஹித் மட்டுமல்ல அணியில் இருக்கும் அத்தனை வீரர்களும் கவலையில்தான் இருக்கிறார்கள். ட்ரெஸ்ஸிங் ரூமில் அவர்களின் உணர்ச்சிகளை பார்க்க வேதனையாக இருக்கிறது.
காயமும் சோகமும் இருக்கிறது, ஆனால் நாளை சூரியன் உதிக்கும். இதைத்தான் விளையாட்டு உங்களுக்குக் கற்பிக்கிறது. நீங்கள் பெரிய உயர்வையும் நசுக்கும் தாழ்வையும் அனுபவிக்கிறீர்கள், இரண்டையும் ஏற்றுக்கொள்ள தயாராக இருக்க வேண்டும்” என தெரிவித்துள்ளார்.