
இங்கிலாந்து நாட்டின் ஆயுத தொழிற்சாலையில் தயாரிக்கப்பட்ட .303 காலிபர் லீ-என்ஃபீல்டு வகை துப்பாக்கிகள் முதல் மற்றும் இரண்டாம் உலக போர்களில் அதிகளவில் பயன்படுத்தப்பட்டன. இந்த துப்பாக்கிகள் சுமார் 5 கிலோ எடையுள்ளவை. 1962ம் ஆண்டு இந்தியா -சீனா இடையே நடைபெற்ற போரில் இந்திய ராணுவம் .303 காலிபர் லீ-என்ஃபீல்டு துப்பாக்கிகளை பயன்படுத்தியது.
உத்தரபிரதேசம், மகாராஷ்டிரா காவல்துறைகள் ஏற்கனவே .303 காலிபர் லீ-என்ஃபீல்டு ரக துப்பாக்கிகள் பயன்படுத்துவதை நிறுத்தி விட்டன. இந்நிலையில் டெல்லி காவல்துறையும் .303 காலிபர் லீ-என்ஃபீல்டு துப்பாக்கிகளை பயன்படுத்துவதை நிறுத்த முடிவு செய்துள்ளன. இந்த வகையை சேர்ந்த 7 ஆயிரம் துப்பாக்கிகள் டெல்லி காவல்துறையில் இருந்து அகற்றப்படும்.