
பலவருடங்களுக்கு முன்னால் இருந்தே மன அழுத்தத்திற்கு நிறைய சிகிச்சைகள் இருக்கின்றன. அதிக மனக்குழப்பம் இருப்பவர்களுக்கு கூட இப்போது நல்ல சிகிச்சைகள் அளிக்கப்படுகின்றன. அதில் மிகவும் முக்கியமானது யோகா மற்றும் தியானம். இது மன அழுத்தத்தில் இருந்து விடுபட மிகவும் உதவுவதாக புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. இந்த சிகிச்சை முறைகளை தொடர்ந்து எடுத்துக்கொண்டு வந்தால் மட்டுமே நல்ல பலனை பெறமுடியும். தொடர்ந்து மருந்துகளை எடுத்துக்கொள்வது, மருத்துவ ஆலோசகரின் வழிமுறைகளை பின்பற்றுவது. தொடர் சிகிச்சை முறைகளை பின்பற்றுவது என்று செய்தால் மட்டுமே சீக்கிரமாக இத்தகைய நிலையில் இருந்து வெளியே வர முடியும்.