
குருகிராம்: அரியானாவில் 6 பேர் பலியான நூஹ் மாவட்டத்தில் நேற்று மீண்டும் வன்முறை ஏற்பட்டது. அரியானா மாநிலம் நூஹ் மாவட்டத்தில் கடந்த ஜூலை மாதம் 31ம் தேதி விஸ்வ இந்து பரிசத் அமைப்பினர் நடத்திய ஊர்வலத்தில் பயங்கர கலவரம் வெடித்து 6 பேர் பலியானார்கள். அங்கு நேற்று மீண்டும் வன்முறை வெடித்தது. நூஹ் என்ற இடத்தில் இந்து தலித் பெண்கள் மீது கல் வீசப்பட்டதாக கூறப்பட்டது. இதில் 3 பெண்கள் காயம் அடைந்தனர். இதனால் நேற்று மீண்டும் மோதல் ஏற்பட்டது.