
சட்டீஸ்கரில் கஸ்டோல் தொகுதியில் ஓட்டுப்போட வரிசையில் நின்ற சகோதரா பாய் நிஷ்கத் என்ற 58 வயது பெண் திடீரென மயங்கி விழுந்து பலியானார். இதே போல் கொரியா வனப் பிரிவுக்குட்பட்ட மங்கோரா கிராமத்திற்கு அருகே உமேந்திர சிங் (25) என்பவர் யானையால் மிதித்து கொல்லப்பட்டார். அவர் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிக்குச் சென்று கொண்டிருந்தபோது, அந்தப் பகுதியில் சுற்றித் திரிந்த யானை தாக்கி பலியானார்.