
கோவை மாவட்டத்தில் மக்களுடன் முதல்வர் முகாம் காளப்பட்டி மெயின்ரோட்டில் வருகிற 22-ந்தேதி காலை 9 மணிமுதல் மதியம் 2.30 மணிவரை நடக்க உள்ளது. இந்த முகாம் தொடர்பாக ஆலோசனைக்குழு கூட்டம் கோவை கலெக்டர் அலுவலகத்தில் கலெக்டர் கிராந்திகுமார் தலைமையில் நடந்தது. இதில் மாநகராட்சி கமிஷனர் சிவகுருபிரபாகரன், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை கலெக்டர் சுரேஷ், உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.