
இறுதிப் போட்டிக்குள் நுழைந்த இந்தியாவின் வெற்றியை ஜீரணிக்க முடியவில்லை என்று பாகிஸ்தான் நடிகை பதிவிட்டதால் அவர் ட்ரோல் செய்யப்பட்டு வருகிறார். உலக கோப்பை கிரிக்கெட் போட்டியின் அரையிறுதி போட்டி மும்பையில் நடந்த போது, இந்திய – நியூசிலாந்து அணிகள் மோதின. விராட் கோலி, ஷ்ரேயாஸ் ஐயர் ஆகியோரின் சதம், முகமது ஷமியின் பந்துவீச்சு ஆகியவை இந்திய அணிக்கு வெற்றியை தேடித் தந்தன. அதனால் இந்திய அணி இறுதி போட்டிக்குள் நுழைந்தது. இந்திய அணியை பலரும் பாராட்டி வரும் நிலையில், இந்த விஷயத்தை பாகிஸ்தான் நடிகை சாஹர் ஷின்வானி ஏற்கவில்லை.
இதுகுறித்து அவர் வெளியிட்ட பதிவில், ‘இந்திய அணி அரையிறுதி போட்டியில் வென்று இறுதி போட்டிக்குள் நுழைந்ததை என்னால் ஜீரணிக்க முடியவில்லை. இந்தியா ஏன் நம்மை விட எல்லாவற்றிலும் முன்னோக்கி செல்கிறது’ என்று குறிப்பிட்டிருந்தார். இவரது இந்த பதிவு, சமூக வலைதளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்திய நெட்டிசன்கள் நடிகைக்கு எதிராக தொடர்ந்து கருத்துகளை பதிவிட்டு வருகின்றனர்.