
அரியலூர் மாவட்டம், திருமானூர் பகுதியிற் சேர்ந்தவர் சுரேஷ்குமார்(39). இவர் பா.ஜனதா கட்சியின் திருமானூர் கிழக்கு ஒன்றிய தலைவர். இவர் முகநூல் பக்கம் மற்றும் சமூக வலைதளங்களில் முதல்-அமைச்சர், அமைச்சர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலரை பற்றி அவதூறாக கருத்து பதிவிட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி தொகுதி ஒருங்கிணைப்பாளர் ராஜ்குமார் திருமானூர் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து போலீசார் சுரேஷ்குமாரை கைது செய்து அரியலூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர்.