
திண்டுக்கல் மாவட்டம், நத்தம் சுற்று வட்டார பகுதியில் செவ்வந்தி பூக்கள் பூத்துக்குலுங்கி அறுவடைக்கு தயாரான நிலையில் உள்ளது.இ ந்த பூக்கள் மதுரை, திண்டுக்கல், திருச்சி உள்பட பல்வேறு நகரங்களுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. கடந்த சில மாதங்களாக முகூர்த்த தினங்கள், திருவிழா காரணமாக விலை ரூ.100 வரை விற்பனை செய்யப்பட்டது. ஐப்பசி மாதம் முகூர்த்த தினங்கள், திருவிழாக்கள் குறைவாக இருப்பதால் பூக்கள் விலை கடுமையாக சரிந்து ரூ.30 முதல் ரூ.50 மட்டுமே விற்பனை செய்யப்படுகிறது. இதனால் வியாபாரிகள் நஷ்டத்தை சந்தித்து வருகின்றனர்.