
இயக்குனர் லோகேஷ் கனகராஜ், நடிகர் ரஜினியின் 171-வது படத்தை இயக்கவுள்ளார். இப்படம் எந்த மாதிரியான கதைக்களத்தில் இருக்கும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். இந்நிலையில், இப்படம் குறித்து இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அப்டேட் கொடுத்துள்ளார். அதன்படி, நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் லோகேஷ் ,இப்படத்தின் கதையை இனிதான் எழுதவுள்ளதாகவும் அடுத்த ஆண்டு ஏப்ரலில் ‘தலைவர் 171’ படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறினார். இதனால் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர்.