
உலக கோப்பையில் வங்கத்துக்கு எதிரான ஆட்டத்தில் இலங்கை வீரர் ஏஞ்சலோ மேத்யூஸ், கிரிக்கெட் விளையாட்டில் முதல் தடவையாக ‘டைம் அவுட்’ முறையில் ஆட்டமிழந்தார். அதாவது ஒரு வீரர் ஆட்டமிழந்ததும் அடுத்த வீரர் 2 நிமிடங்களுக்குள் நடு களத்துக்கு வந்து பந்து வீச்சை சந்திக்க வேண்டும். ஆனால் மேத்யூஸ் அவ்வாறு செய்யததால், வங்கம் தரப்பில் செய்த முறையீடை ஏற்று நடுவர் ‘டைம் அவுட்’ தந்தார். தனது ஹெல்மெட்டை மாற்ற ஏற்பட்ட தாமதம் என்ற மேத்யூஸ் நீண்ட நேரம் விளக்கியும் நடுவர் ஏற்கவில்லை. இந்நிலையில் கிரிக்கெட் விதிகளை வகுக்கும் இங்கிலாந்தின் எம்சிசி இது குறித்து நேற்று விளக்கம் அளித்துள்ளது. அதில் ‘ஒரு நிமிடம் 54நிமிடங்களுக்குள் மேத்யூஸ் நடுகளத்துக்கு வந்து விட்டார். அதன்பிறகு சரியில்லாத ஹெல்மெட்டை மாற்ற வேண்டும் என்று பெவிலியினில் இருந்த தனது அணியினருக்கு சைகை செய்தார். அதற்கு பதில் நடுவரிடம் நிலைமையை மேத்யூஸ் விளக்கி இருந்தால் ‘டைம் அவுட்’ நிலைமை ஏற்பட்டிருக்காது’ என்று குறிப்பிட்டுள்ளது.