
கோவை மாவட்ட த்தில் பொது விநியோகத் திட்ட குறைதீர் சிறப்பு முகாம் நாளை காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை நடைபெறவுள்ளது. இந்த முகாமில் குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம், குடும்ப தலைவர் புகைப்படம் மாற்றம், செல்போன் எண் மாற்றம் மற்றும் நகல் குடும்ப அட்டை பெறுதல் தொடர்பான குறைகளை மனுக்களாக வழங்கி பயன்பெறலாம் என, மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.