
கொச்சி களமசேரியில் நடைபெற்ற குண்டுவெடிப்பில் பலத்த தீக்காயம் அடைந்த மலையத்தூரைச் சேர்ந்த பிரவீன் உயிரிழந்தார். இதன் மூலம் குண்டுவெடிப்பில் பலியானோர் எண்ணிக்கை 6 ஆக உயர்ந்துள்ளது. மலையத்தூரைச் சேர்ந்த பிரவீனின் தாயார் சாலி பிரதீபன் கடந்த 11ஆம் தேதி உயிரிழந்தார். 12 வயதான லிபினாவும் குண்டுவெடிப்பு நடந்த நாளில் இறந்தார். சகோதரி லிபினாவை காப்பாற்ற முயன்ற பிரவீன் தீக்காயம் அடைந்தார். இதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர். இதுவரை எட்டு பேர் தீக்காயம் அடைந்து பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.