
பிரபல தெலுங்கு நடிகை ரேகா போஜ் திடீரென அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளார். இதுகுறித்து அவர் தனது ‘இன்ஸ்டாகிராம்’ பக்கத்தில், ‘உலகக்கோப்பையை இந்தியா வென்றுவிட்டால் விசாகப்பட்டினம் கடற்கரையில் நான் நிர்வாணமாக ஓடுகிறேன்’ என தெரிவித்துள்ளார். இந்த கருத்தை பார்த்த ரசிகர்கள் பலர் சுயவிளம்பரத்திற்காக இப்படி ஒரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார் என்று விமர்சித்துள்ளனர். ஆனால் ரேகா போஜ் இதை மறுத்து, ‘இந்திய கிரிக்கெட் அணி மீதான அன்பால் இதனை செய்கிறேன்’ என்று பதில் அளித்துள்ளார். சில குறும்புக்கார ரசிகர்கள் ‘விசாகப்பட்டினத்தில் 19-ந்தேதி சந்திப்போம்’ என்றெல்லாம் ‘கமெண்ட்’ செய்து வருகிறார்கள்.