
உடல் உஷ்ணத்தால் அவதிப்படுவோர் இலந்தை பழம் சாப்பிடலாம். உடலில் நீர்ச்சத்து இழப்பை சரிசெய்ய முடியும். ஞாபக சக்தியை தரும். சீன பாரம்பரிய மருத்துவத்திலும், சித்த மருத்துவத்திலும் இலந்தை பழத்தின் பங்களிப்பு அதிகமாக உள்ளது. பேருந்தில் பயணம் செய்யும்போது சிலருக்கு வாந்தி, தலைச்சுற்றல் உண்டாகும். இவர்கள் இலந்தை பழத்தை சாப்பிட்டு வந்தால் தலைச்சுற்றல், வாந்தி ஏற்படாது.