
ஈரோடு மாமரத்துபாளையம் பகுதியை சேர்ந்தவர் தினேஷ் (21). ஆயில் உற்பத்தி நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார். சம்பவத்தன்று இரவு பணி முடிந்து மோட்டா ர் சைக்கிளில் வந்து கொண்டிருந்தார். அப்போது திடீரென சாலையின் தடுப்பு சுவரில் மோட்டார் சைக்கிள் மோதியது. இந்த விபத்தில் தினேஷ் படுகாயம் அடைந்தார். அவரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார். அங்கு பரிசோதித்த டாக்டர் வரும் வழியிலேயே தினேஷ் இறந்து விட்டதாக தெரிவித்தார். இது குறித்து வீரப்பன்சத்திரம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.