
அரசு பஸ்களின் கட்டமைப்புகள், பயண நேரம் உள்ளிட்டவற்றில் போக்குவரத்துக்கழகம் அதிக கவனம் செலுத்தி வருவதால் சமீபகாலமாக அரசு பஸ்களில் பயணம் செய்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதன்படி, நிகழாண்டு அக்டோபர் மாதத்தில் சுமார் 1.85 கோடி பயணிகள் அரசு பஸ்களில் பயணம் செய்திருப்பதாக அரசு விரைவுப் போக்குவரத்துக்கழகம் தெரிவித்துள்ளது. 2022 அக்டோபரில் 1.67 கோடி பேர் அரசு பஸ்களில் பயணித்திருந்த நிலையில், நிகழாண்டு 18 லட்சம் பேர் அதிகமாக பயணித்துள்ளனர். விரைவில் 1,666 புதிய பஸ்கள் அறிமுகம் செய்யப்படவுள்ளதால் இந்த எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என போக்குவரத்துக் கழக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.