
மக்கள்தொகை பெருக்கத்திற்கு ஏற்ப பார்க்கிங் வசதிகளை விரிவாக்கம் செய்ய ஷார்ஜா முன்வந்துள்ளது . இந்த ஆண்டு இதுவரை 11,025 பார்க்கிங் இடங்களுக்கு கட்டணம் விதிக்கப்பட்டுள்ளதாக ஷார்ஜா நகர நகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனர். குடியிருப்பு மற்றும் வணிகத் துறைகளின் அதிகரித்து வரும் பார்க்கிங் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது, நகரில் 67,583 பொது பார்க்கிங் இடங்கள் உள்ளன. இங்கே கட்டண பகுதிகள் தனித்தனியாக குறிக்கப்பட்டுள்ளன. அமீரகத்தின் அழகை மேம்படுத்த கூடுதல் வாகன நிறுத்துமிடங்களுக்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது என்று பொது பார்க்கிங் துறை இயக்குநர் ஹமீத் அல் கெய்த் தெரிவித்தார்.