
பெருந்துறை வேளாண்மை பொருள்கள் உற்பத்தி யாளர்கள் கூட்டுறவு விற்பனைச் சங்கத்தில் கொப்பரை ஏலம் நடைபெற்றது. இதில் முதல் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக கிலோ ரூ.77.79-க்கும், அதிகபட்சமாக, ரூ.88.30 -க்கும் விற்பனையானது. 2-ம் தரக் கொப்பரை குறைந்தபட்சமாக ரூ.30.30-க்கும், அதிகபட்சமாக ரூ.82.99 -க்கும் விற்பனையானது. மொத்தம் ரூ. 83 லட்சத்துக்கு கொப்பரை வர்த்தகம் நடைபெற்றது.