
ஸ்ரீஹரிகோட்டா: இஸ்ரோவும் நாசாவும் இணைந்து தயாரிக்கும் நிசார் செயற்கைகோள் அடுத்தாண்டு ஏவப்படும் என இஸ்ரோ தெரிவித்துள்ளது. சிந்தடிக் அப்பர்ச்சர் ரேடார் எனப்படும் ‘நிசார்’ இந்திய-அமெரிக்க தொழில்நுட்பத்தில் உருவானது. நிசார் செயற்கைகோளுக்கான முழு சோதனைகளும் பெங்களூருவில் நடைபெற்று வருவதாக நாசா தகவல் தெரிவித்துள்ளது. கடல்மட்ட உயரம், எரிமலை வெடிப்பு, பனிக்கட்டி உருகுதல் தரவுகளை நிசார் செயற்கைக்கோள் துல்லியமாக தரும்.