
தெலுங்கானா மாநிலம் ஹைதராபாத் மாவட்டத்தில் உள்ள நம்பள்ளி பகுதியில் அமைந்திருந்த 4 மாடி குடியிருப்பில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. தரைத்தளத்தில் உள்ள காரேஜ் ஒன்றில் காரை பழுது பார்த்துக் கொண்டிருந்தபோது இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. இந்த விபத்தில் ஒரே குடும்பத்தை சேர்ந்த ஆறு பேர் உட்பட ஒன்பது பேர் உயிரிழந்த நிலையில் எட்டு பேர் படுகாயம் அடைந்துள்ளனர். இது குறித்து வழக்கு பதிவு செய்த அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் .