
சென்னை குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில்:- சென்னை கோயம்பேடு காளியம்மன் கோயில் தெரு மற்றும் ஆற்காடு சாலையில் உள்ள அஞ்சலகம் அருகில் குடிநீர்க்குழாய் இணைப்பு பணிகள் நாளை, நாளை மறுநாள் நடைபெறவுள்ளதால் சூளைமேடு நீர் பகிர்மான நிலையம் மற்றும் வள்ளுவர் கோட்டத்தில் உள்ள புதிய நீர் பகிர்மான நிலையம் தற்காலிகமாக நிறுத்தப்பட உள்ளது. நாளை காலை 7 மணி முதல் நாளை மறுநாள் இரவு 7 மணி வரை அண்ணா நகர், தேனாம்பேட்டை, கோடம்பாக்கம், வளசரவாக்கம் ஆகிய மண்டலங்களுக்கு குழாய்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர் விநியோகம் நிறுத்தப்படும்.