
ஒரு உலக கோப்பையில் அதிக ரன் குவித்த சச்சினின் (673 ரன்) சாதனையையும் கோஹ்லி நேற்று முறியடித்தார். நடப்பு தொடரில் அவர் இதுவரை 10 போட்டியில் 711 ரன் (அதிகம் 117, சராசரி 101.57, சதம் 3, அரை சதம் 5) குவித்து முதலிடம் வகிக்கிறார். ஒருநாள் போட்டிகளில் அதிக ரன் குவித்த வீரர்கள் பட்டியலில் ஆஸ்திரேலிய அணி முன்னாள் கேப்டன் ரிக்கி பான்டிங் சாதனையை (13,704 ரன்) முறியடித்த கோஹ்லி (13,794 ரன்) 3வது இடத்துக்கு முன்னேறினார். இந்த பட்டியலில் சச்சின் (18,426 ரன்), இலங்கையின் சங்கக்கரா (14,234 ரன்) முதல் 2 இடங்களில் உள்ளனர்.