
உத்தரகாண்ட் மாநிலத்தில் தேசிய நெடுஞ்சாலை சுரங்கப் பாதையில் சிக்கியுள்ள தொழிலாளர்களை மீட்கும் பணி மேலும் தாமதமாகும் என தகவல் வெளியாகியுள்ளது. ஏற்கனவே 5 நாட்கள் கடந்துவிட்ட நிலையில் மீட்புப் பணி மேலும் 3 நாட்கள் தாமதமாகலாம் என்று மீட்புக் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர். தாய்லாந்தில் குகையில் சிக்கிய 12 சிறுவர்களை மீட்ட நிறுவனத்தை தொடர்பு கொண்டு உதவி கோரப்பட்டுள்ளதாக அமைச்சர் வி.கே.சிங் தகவல் தெரிவித்துள்ளார். நார்வே நாட்டைச் சேர்ந்த புவி தொழில்நுட்ப நிறுவனத்திடமும் ஆலோசனை கேட்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.