
இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகத்திற்கு ஹமாஸ் சிறைபிடிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள் மாபெரும் பேரணி நடத்துகின்றனர் . தலைநகர் டெல் அவிவில் தொடங்கிய பேரணி மற்றும் கண்டன நிகழ்வுகள் ஐந்து நாட்கள் நீடிக்கும். 63 கி.மீ., தூரத்தை கடந்து பிரதமர் அலுவலகம் சென்றடையும் பேரணியில் நூற்றுக்கணக்கானோர் பங்கேற்கின்றனர். ஹமாஸ் அமைப்பினரால் சிறைப்பிடிக்கப்பட்டவர்களை விரைவில் விடுவிக்குமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்தனர். ஒக்டோபர் 7ஆம் திகதி இடம்பெற்ற ஹமாஸ் நடவடிக்கையின் பின்னர் 240 பேர் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். அவர்களில் சிலர் முன்பே விடுவிக்கப்பட்டனர். இஸ்ரேல்-ஹமாஸ் மோதல் நீடித்து வருவதால், பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகுவின் செல்வாக்கு சரிந்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக, நெதன்யாகு பதவி விலகக் கோரி அவரது இல்லம் முன்பு மாபெரும் கண்டனப் பேரணி நடைபெற்றது. ஜெருசலேம் அசா தெருவில் உள்ள குடியிருப்புக்கு முன்பாக கடந்த சனிக்கிழமை இரவு நடைபெற்ற போராட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர். ஹமாஸால் பிடிக்கப்பட்ட பணயக்கைதிகளை திருப்பித் தரத் தவறியதால், நெதன்யாகு உடனடியாக பதவி விலக வேண்டும் என்று போராட்டக்காரர்கள் கோரினர். அக்டோபர் 7ஆம் தேதி ஹமாஸ் நடத்திய தாக்குதலில் 1400க்கும் மேற்பட்ட இஸ்ரேலியர்கள் கொல்லப்பட்டனர். 240க்கும் மேற்பட்டோர் பிணைக் கைதிகளாகப் பிடிக்கப்பட்டனர். ஹமாஸ் தாக்குதலுக்குப் பிறகு இஸ்ரேலின் பதிலடியில் இதுவரை 11,000க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டுள்ளனர்.