
பாகிஸ்தான் தீவிரவாதி நவீத் ஜாட் மருத்துவ பரிசோதனைக்காக கடந்த 2018ம் ஆண்டு ஸ்ரீநகரில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டார். அப்போது அங்கிருந்து நவீத் ஜாட் தப்புவதற்கு உதவியாக லஷ்கர் தீவிரவாதிகள் முகமது சாபி வானி, முகமது டிக்கா கான் ஆகியோர் போலீசார் மீது தாக்குதல் நடத்தினர். இதனை பயன்படுத்தி அவன் அங்கிருந்து தப்பினான். இந்நிலையில், இந்த வழக்கை விசாரித்து வரும் தேசிய புலனாய்வு அமைப்பு, சாபி வானியின் 5 சொத்துகள் மற்றும் டிக்கா கானின் 3 சொத்துகள் என மொத்தம் 8 சொத்துக்களை உபா சட்டத்தின் கீழ் முடக்கினர்.