
வைக்கம்: கேரளா மாநிலம், வைக்கத்தில் தந்தை பெரியார் நினைவிடம் சீரமைக்கும் பணிகளை அமைச்சர் எ.வ.வேலு ஆய்வு செய்தார். கேரளா மாநிலம் வைக்கத்தில் அமைந்துள்ள தந்தை பெரியார் நினைவிடத்தை சீரமைக்க வேண்டும் என்று முதலமைச்சர் 30.3.2023 அன்று அறிவித்தார்கள். அமைச்சர் திரு.எ.வ.வேலு பலமுறை கேரளா வைக்கம் சென்று சீரமைப்புப் பணிகளை ஆய்வு செய்து வந்தார்கள். இன்று காலை 11.00 மணியளவில், வைக்கம் சென்று, சீரமைப்பு பணிகளின் முன்னேற்றம் குறித்து ஆய்வு செய்தார். தந்தை பெரியாரின் நினைவிடம் தரைதளம் மற்றும் முதல் தளத்தை உள்ளடக்கி கட்டப்பட்டுள்ளது.