
மத்தியப்பிரதேசத்தில் நாளை மறுநாள் சட்டப்பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற உள்ளது. இதனையொட்டி பீடல் மாவட்டத்தில் நடந்த பிரசார கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொண்டார். அப்போது பேசிய பிரதமர் மோடி, ஏராளமான மக்கள் திரண்டு இருப்பது மத்தியப்பிரதேசத்தில் பாஜவின் வெற்றி உறுதி என்பதை உணர்த்துகிறது. நாளை(இன்று) பழங்குடியின சுதந்திர போராட்ட வீரரான பிர்சா முண்டா பிறந்த நாள். நான் ஜார்கண்ட் சென்று பிர்சா முண்டாவிற்கு மரியாதை செலுத்த இருக்கிறேன். இந்த ஒட்டுமொத்த நாடும் பக்வான் பிர்சா முண்டா ஜெயந்தியை கொண்டாடுகிறது. இந்த நாளில் பழங்குடியின மக்களின் நலனுக்காக ஒன்றிய அரசு ரூ.24,000கோடி மதிப்பிலான திட்டம் துவங்கப்பட உள்ளது. தேர்தலுக்கு முன்பாக காங்கிரஸ் கட்சி தோல்வியை ஏற்றுக்கொண்டுள்ளது” என்றார்.