
மேற்கு வங்காளத்தில் உள்ள மேற்கு மிட்னாபூரின் தியோலி கிராமத்தில் 250 மில்லியன் ஆண்டுகள் பழமையான முதலை போன்ற பழங்கால உயிரினத்தின் படிமம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ட்ரயாசிக் காலத்தில் பாங்கேயா கண்டத்தில் வாழ்ந்ததாக நம்பப்படும் இந்த இனத்திற்கு ‘சம்சராசுகஸ் பலே’ என்று பெயரிடப்பட்டுள்ளது. அவை அழிந்துபோன Proterosacidae குடும்பத்தைச் சேர்ந்தவை. இன்று வங்காளத்தின் சதுப்புநிலங்களில் வாழும் உப்பு நீர் முதலைகள் இவற்றைப் போலவே இருக்கின்றன என்கிறார்கள் ஆய்வாளர்கள். சமீபத்தில் வெளியான ஆராய்ச்சி இதழில் இந்த கண்டுபிடிப்பு குறித்து விஞ்ஞானிகள் குறிப்பிட்டுள்ளனர். இந்தியாவில் இதுபோன்ற புதைபடிவம் கண்டுபிடிக்கப்படுவது இதுவே முதல் முறை. இது வங்காளத்தில் காணப்படும் மிகப் பழமையான முதுகெலும்பு புதைபடிவமாகும். இன்றைய முதலைகளைப் போலல்லாமல், அவை கீழ்நோக்கி வளைந்த மூக்கைக் கொண்டிருந்தன. அவை சுமார் 13 அடி நீளம் கொண்டவை மற்றும் பெரும்பாலான நேரத்தை நீருக்கடியில் கழித்தன.