
அல் குத்ஸ், அல் நசர் குழந்தைகள் மருத்துவமனை, அல் ரான்டிசி குழந்தைகள் மருத்துவமனை போன்றவற்றின் கதவுகள் மூடப்பட்டு உள்நோயாளிகளுக்கு மட்டும் சிகிச்சை அளித்து வருகின்றன. இந்த மருத்துவமனைகளின் அடியில் ரகசிய சுரங்கம் அமைத்து ஹமாஸ் படையினர் பதுங்கியிருப்பதாக இஸ்ரேல் ராணுவம் குற்றம்சாட்டி வருகிறது. இதற்கான சில வீடியோ ஆதாரங்களையும் நேற்று வெளியிட்டது. இதனால் அங்கிருக்கும் நோயாளிகள் மருத்துவ பணியாளர்களை வெளியேற தொடர்ந்து எச்சரிக்கிறது. மருத்துவமனைகளுக்கு கீழ் ரகசிய சுரங்கம் எதுவும் அமைக்கப்படவில்லை என ஹமாசும், மருத்துவமனை நிர்வாகங்களும் தெரிவித்துள்ளன. உணவு, குடிநீர், மருந்து இல்லாமல் வடக்கு காசாவில் மக்கள் சிக்கியிருப்பதால் அவர்களின் நிலை நாளுக்கு நாள் மோசமடைந்து வருகிறது.