
கோவை காரமடை அடுத்த பெள்ளாதி பகுதியில் பொதுப்பணித் துறைக்கு சொந்தமான பெரிய குளம் அமைந்து உள்ளது. குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த பொதுமக்கள் நேற்று குளக்கரைக்கு சென்றனர். அப்போது அங்கு உள்ள ஒரு பாறையில் பெரிய முதலை சாவகாசமாக படுத்திருந்தது. இதனை பார்த்ததும் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். தொடர்ந்து அவர்கள் குரும்பபாளையம் குட்டையோரத்தில் கிடந்த முதலையை செல்போனில் படம் பிடித்தனர். அப்போது அது திடீரென தலையை தூக்கி பார்த்தது. பின்னர் பாறையில் இருந்து வெளியேறி தண்ணீருக்குள் சென்று விட்டது. அங்கு தற்போது நீந்தியபடி குளத்தை சுற்றி வருகிறது. குரும்பபாளையம் குட்டையில் முதலை நடமாட்டம் தென்பட்டு இருப்பது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.