
காஸாவிற்கு இன்குபேட்டர்களை வழங்கும் பணியை இஸ்ரேல் ராணுவம் தொடங்கியுள்ளது. காசாவில் உள்ள அல் ஷிஃபா மருத்துவமனையில் மின்சாரம் துண்டிக்கப்பட்டதால் புதிதாகப் பிறந்த 3 குழந்தைகள் இறந்ததாகவும், மீதமுள்ள குழந்தைகள் இறக்கும் தருவாயில் இருப்பதாகவும் தெரிவித்த மருத்துவர்கள், அந்தக் காட்சிகளையும் வெளியிட்டனர். இந்தக் காட்சிகள் வெளிவந்ததை அடுத்து, இஸ்ரேலுக்கு எதிராகப் பரவலான விமர்சனங்கள் எழுந்தன. இதற்கிடையில், அல் ஷிஃபா மருத்துவமனையைச் சுற்றி இஸ்ரேலியப் படைகள் நிறுத்தப்பட்டுள்ளன. மருத்துவமனையின் கீழ் நிலத்தடி சுரங்கப்பாதையில் ஹமாஸின் தலைமையகம் இருப்பதாகவும் நோயாளிகளை மனிதக் கேடயங்களாகப் பயன்படுத்துவதாகவும் இஸ்ரேல் குற்றம் சாட்டுகிறது. இதேவேளை, மருத்துவமனையின் முற்றத்தில் 170 பேருக்கான கல்லறைகள் தயாராகி வருவதாக பிபிசி தெரிவித்துள்ளது. தெற்கு காசா மீது இஸ்ரேல் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருகிறது.