
இந்தியா – நியூசி. மோதும் அரையிறுதி போட்டிக்கான டிக்கெட்களை பிளாக்கில் அதிக விலைக்கு விற்ற அஷோக் கோத்தாரி என்ற நபரை மும்பை போலீசார் கைது செய்துள்ளனர். அவர் ஒரு டிக்கெட்டை ரூ.27 ஆயிரத்தில் இருந்து ரூ.2.5 லட்சம் வரை விற்றுள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.